உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு; பட்டியலின தலைவர்களுக்கு ராமதாஸ் அழைப்பு

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு; பட்டியலின தலைவர்களுக்கு ராமதாஸ் அழைப்பு

திண்டிவனம் : 'மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டில் பட்டியலின சமூக தலைவர்கள் பங்கேற்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வரும் மே 11ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று திண்டிவனத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:அனைத்து மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சியாக பா.ம.க., உள்ளது. 18 சதவீத இடஒதுக்கீட்டை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். இப்போதுள்ள பட்டியலின தலைவர்கள் மாமல்லபுரம் மாநாட்டில் கலந்து கொள்ளுங்கள். பட்டியலின சமூக தலைவர்கள் மாநாடு நடத்தினால் பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்பார்கள். மாநாட்டிற்கு வரும் பா.ம.க.,வினரை, பட்டியலின சமூகத்தினர் வாழ்த்து சொல்லி அனுப்பி வையுங்கள். இந்த மாநாட்டிற்கு 364 சமுதாய மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். நீங்களும் கலந்துக்கொள்ளுங்கள் என்றார்.பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது:மாநாட்டை நாம் வெற்றிகரமாக நடத்த வேண்டும். பா.ம.க., வன்னியர் சங்கம் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டிற்காக நீங்கள் செய்யும் வேலை, வரும் 2026 தேர்தலில் பிரதிபலிக்க வேண்டும். அடுத்து கூட்டணி ஆட்சிதான் என மாநாடு மூலம் நாம் காண்பிக்க வேண்டும்.மாநாட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எல்லா பகுதிகளிலிருந்தும் மாநாட்டிற்கு வரவேண்டும். மாநாட்டிற்கு வரும் கட்சியினர் நிதி கொடுக்க வேண்டும். மாநாட்டிற்கு வருபவர்கள் புதுச்சேரி வழியாக வரவேண்டாம். யாரிடமும் எந்த பிரச்னையும் செய்யக்கூடாது. நமக்கு யாரும் எதிரி கிடையாது. நமக்கு எந்த சமுதாயமும் எதிரி கிடையாது.கூட்டத்தை காட்டினால்தான் கூட்டணி ஆட்சிக்கு வழிவகுக்கும். இடஒதுக்கீடு வழங்கும் ஆணைக்கு நாமே கையெழுத்து போடும் மாநாடாக மாமல்லபுரம் இருக்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.Ramakrishnan
மார் 18, 2025 17:36

அய்யா பேச்சை நம்பி, 364 சமுதாய மக்களும் கலந்து கொள்ள வேண்டுமாம். அந்த மாநாட்டில் உங்க சமுதாயத்துக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று தீர்மானம் போடுவீர்கள். அதை மற்றவர்கள் ஆதரிக்கவேண்டுமா? பட்டியலின சமூக மக்கள் மீது அக்கறை இருந்தால், சிதம்பரத்தில் திருமாவை எதிர்த்து பிரசாரம் செய்தது ஏன்?


முக்கிய வீடியோ