உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதியவரை தாக்கியவர் கைது

முதியவரை தாக்கியவர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் கடன் தொகையை கேட்ட தகராறில், முதியவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். திருவெண்ணைநல்லுார் அடுத்த அரும்பட்டையைச் சேர்ந்தவர் வீராசாமி, 63; இவரது, உறவினர் குமரேசன். 50; இவர்களிடம், விழுப்புரம் சாலாமேடு பிரிரதர்ஷினி நகரைச் சேர்ந்தவர் சம்பத் மகன் வெங்கடபிரசாத், 21; கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை, கடந்த 10 நாட்களாக வீராசாமி, குமரேசன் இருவரும் நேரில் சென்று கேட்டும் தரவில்லை. இந்நிலையில், நேற்று வழுதரெட்டி பகுதியில் நின்றிருந்த வீராசாமியிடம் வெங்கடபிரசாத் தகராறு செய்து, அவரை தாக்கி அவரது மொபைல் போனை உடைத்துள்ளார். இது குறித்து, குமரேசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, வெங்கடபிரசாத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை