மேலும் செய்திகள்
பயிற்சி நிறைவு விழா
05-Apr-2026
விழுப்புரம்: விழுப்புரத்தில் தொழிலாளியைத் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம், வி.மருதுாரைச் சேர்ந்தவர் அபுதாகிர், 42; கூலித் தொழிலாளி. இவரது பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள் காணவில்லை. இதை பக்கத்து வீட்டை சேர்ந்த ேஷக் பஷிர் அகமது, 40; எடுத்திருக்கலாம் என நினைத்து, அபுதாகீர் நேற்று அப்பகுதியில் வந்த ேஷக் பஷிர்அகமதிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ேஷக் பஷிர் அகமது, அபுதாகிரை தாக்கினார். புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து ேஷக் பஷிர் அகமதை கைது செய்தனர்.
05-Apr-2026