உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவிலில்  நகை திருடிய ஆசாமி கைது  

கோவிலில்  நகை திருடிய ஆசாமி கைது  

வானுார்: வானுார் அருகே அம்மன் கோவிலில் நகைகளை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். பூத்துறை கிராமத்தில் உள்ள அமிர்தவர்ஷினி அம்பாள் கோவிலில் கடந்த 26ம் தேதி அம்மன் மீது அணிவிக்கப்பட்டிருந்த தாலி பொட்டு, 3 கேரளா குத்துவிளக்கு, ஒரு தொங்கு விளக்கு என ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிசென்றனர். இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்த விவகாரத்தில், புதுச்சேரி மாநிலம் வில்லியனுார் அடுத்த கோபாலன் கடையை சேர்ந்த வரதராஜன் மகன் சத்தியமூர்த்தி, 30 என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் அவர் பூத்துறை பகுதியில் பண்ணையில் புகுந்து 16 ஆடுகள் திருடியதும், அதில் 11 ஆடுகளை விற்று பணமாக்கியதும், எஞ்சிய ஆடுகளை 5 ஆடுகளை வளர்த்து வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த நகைகள் மற்றும் 5 ஆடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !