உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு

பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு

விழுப்புரம்; விழுப்புரம் அருகே பைக்கிலிருந்து மயங்கி விழுந்த டிரைவர் இறந்தார். விழுப்புரம் அடுத்த மேல்பாதியைச் சேர்ந்தவர் விமலன், 41; கடலுாரில் தனியார் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் டிரைவராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் மாலை கும்பகோணம் நெடுஞ்சாலையில் தனது பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கோலியனுார் வந்தபோது, பைக்கிலிருந்து திடீரென மயங்கி விழுந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை