உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டி அருகே காரிலிருந்து விழுந்தவர் சாவு

விக்கிரவாண்டி அருகே காரிலிருந்து விழுந்தவர் சாவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே காரிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த மணியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், 38; தனியார் நிறுவன வெல்டராக பணிபுரிந்து வந்தார். இவர் தான் பணிபுரியும் கம்பெனி முதலாளி விஸ்வலிங்கம், 59; என்பவருடன் பொருட்கள் வாங்க திருச்சியிலிருந்து கடந்த 20ம் தேதி இன்டிகா காரில் ஆரணிக்கு புறப்பட்டு சென்றனர்.காரை மணச்சநல்லுாரைச் சேர்ந்த டிரைவர் நாகராஜன், 50; ஓட்டினார். அதிகாலை 3:00 மணியளவில் லட்சுமிபுரம் தனியார் கல்லுாரி எதிரே வரும் போது சிறுநீர் கழிக்க கார் நிறுத்தும் முன் கீழே இறங்கியவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ