உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் சாவு

சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் சாவு

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் தமிழ்ச்செல்வன், 27; இவர், சென்னையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். கடந்த 20ம் தேதி மாலை எதிர் வீட்டை சேர்ந்த தேசிங்கு, 56; என்பவருடன் பைக்கில் செஞ்சிக்கு வந்தார். வரும் வழியில் மழையினால் ஏற்பட்ட ஈரத்தில், பைக் வழுக்கி விழுந்ததில் இருவரும் காயம் அடைந்த இருவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில், நேற்று காலை 8:00 மணியளவில் தமிழ்செல்வன் திடீரென தலை அதிகமாக வலிப்பதாக கூறியுள்ளார். உறவினர்கள் அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது வழியில் அவர் இறந்தார். இது குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை