மேலாண்மை குழு கூட்டம்
மயிலம் : மயிலம் அடுத்த செண்டியம்பாக்கம் அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தலைமை ஆசிரியர் அருள்மொழி வர்மன் தலைமை தாங்கினார். மேலாண்மைக் குழு தலைவர் பிரபாவதி, துணை தலைவர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர். உதவி ஆசிரியர் ஆபிரகாம் வரவேற்றார். கூட்டத்தில் புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அரசு பள்ளியில் சேர்ந்தால் பல்வேறு பலன்கள் மாணவர்களுக்கு கிடைக்கிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என தலைமையாசிரியர் கேட்டுக் கொண்டார்.