ராஜராஜேஸ்வரி கோவிலில் மண்டல பூஜை நிறைவு
திண்டிவனம்: ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. திண்டிவனம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில், 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு காலை சிறப்பு யாகவேள்விகள் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 5:00 மணியளவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.