உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மார்க்கெட் கமிட்டிகளில் 3வது நாளாக ஸ்டிரைக்

மார்க்கெட் கமிட்டிகளில் 3வது நாளாக ஸ்டிரைக்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளில் மூன்றாவது நாளாக விளைபொருட்களை வியாபாரிகள் கொள்முதல் செய்யாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். தமிழக மார்க்கெட் கமிட்டிகளில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ -நாம்) திட்டத்தில், விவசாயிகளின் விளைபொருட்களை, வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இத்திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வியாபாரிகள் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளில் கடந்த ஜூலை, 30ம் தேதி முதல் வியாபாரிகள், விளைபொருட்களை கொள்முதல் செய்யாமல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து நேற்று மூன்றாவது நாளாக வியாபாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை கொண்டுவராததால், மார்க்கெட் கமிட்டிகள் வெறிச்சோடி காணப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !