உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காணை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

காணை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்டம், காணை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.வெண்மணியாத்துாரில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் சந்திர சேகர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் கலைசெல்வி, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி செல்வம், துணை செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.முன்னதாக, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., காணை கிழக்கு ஒன்றிய தி.மு.க., அலுவலகத்தை திறந்து வைத்து, செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியதாவது;தமிழக முதல்வரை மீண்டும் வரும் தேர்தலில் வெற்றி பெற செய்து, முதல்வராக்கும் வகையில் நாம் பணிபுரிய வேண்டும். வரும் 20ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.மாற்று கட்சியினரை நமது கட்சியில் இணையும் வகையில் நமது திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என கூறினார்.மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் தேவபூஷணம் முருகன், ஜெயா குமரன், ஊராட்சி தலைவர்கள் ரமணன், சிவசங்கர், அறிவழகன், கிளை செயலாளர்கள் முருகதாஸ், ராஜேந்திரன், தேவன், ஜெயக்கொடி, ராஜேந்திரன், ராஜேஷ், ஆரோக்கியதாஸ், அரிகிருஷ்ணன், செந்தில், மகளிரணி நிர்வாகிகள் அமுதா, முருகன், சுமதி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !