மேலும் செய்திகள்
டி.வி.நகர் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
29-Jun-2025
திண்டிவனம்; திண்டிவனம் மூங்கிலம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பால் அபிஷேகம் நடந்தது. அதனையொட்டி, கோவில் வளாகத்திலிருந்து திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பால் குடம் ஏந் தி, முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் பால் அபிேஷகம் செய்தனர். மாலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், ஊஞ்சல் உ ற்சவமும் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
29-Jun-2025