உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழு

பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழு

விழுப்புரம்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் மற்றும் மாவட்ட ஆவின் ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ரத்னகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் கதிரவன், விஜயகுமார் முன்னிலை வகித்தனர். சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், கலப்பின தீவனத்தை 50 சதவீத மானிய விலையில் அரசு வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பணியாளார்கள் சம்பள நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை