உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கடன் பிரச்னையால் பால் வியாபாரி தற்கொலை

கடன் பிரச்னையால் பால் வியாபாரி தற்கொலை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கடன் பிரச்னையால், பால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம், சாலாமேடு, மீனாட்சி நகரைச் சேர்ந்த பிரகாஷ், 42; பால் வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு, பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் அதிகரித்து சமாளிக்க முடியாமல் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் காலை, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் அன்று மாலை இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ