மினி குடிநீர் தொட்டி திறப்பு விழா
செஞ்சி: செஞ்சி அடுத்த சே.பேட்டை கிராமத்தில் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் மினி குடிநீர் தொட்டி திறப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக ஆழ்துளை கிணறு மற்றும் மினி குடிநீர் தொட்டி சே.பேட்டையில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., மினி குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். காமகரம் ஊராட்சி தலைவர் அஞ்சலை சக்கரவர்த்தி, ஆசிரியர் வேலு, தி.மு.க., மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, நிர்வாகிகள் காசிநாதன், செந்தில், சேகர், மன்னார் உட்பட பலர் பங்கேற்றனர்.