உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர் மரியாதை

திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர் மரியாதை

விழுப்புரம்: விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர் மரியாதை செலுத்தினார்.திருவள்ளுவர் தினத்தை யொட்டி, விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நேற்று அலங்கரிக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர் பொன்முடி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி, அவை தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை மாநில இணை செயலாளர் புஷ்பராஜ், நகர்மன்ற சேர்மன் தமிழ்செல்வி, துணை தலைவர் சித்திக்அலி, நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர் ராஜா உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.இதேபோல், விழுப்புரம் பழைய பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலைக்கு சமூகநீதி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நிறுவனர் சாமிக்கண்ணு, தலைவர் குபேரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை