உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுபான்மையினரை அரவணைத்து செல்லும் ஒரே இயக்கம் தி.மு.க., நோன்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேட்டி

சிறுபான்மையினரை அரவணைத்து செல்லும் ஒரே இயக்கம் தி.மு.க., நோன்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேட்டி

விழுப்புரம்; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் மந்தக்கரை திடலில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் முகமது இப்ராஹீம் தலைமை தாங்கினார். செயலாளர் அமீர் அப்பாஸ், மண்டல செயலாளர் அப்துல் ரகுமான், த.மு.மு.க., மாநில செயலாளர் முஸ்தாக்தீன், ம.ம.க., மாநில வர்த்தக அணி செயலாளர் அப்துல் ஹக்கீம் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் பொன்முடி, கணேசன் ஆகியோர் இப்தார் நோன்பை துவக்கி வைத்தனர்.தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறுகையில், 'எல்லோருக்கும் எல்லாம், அனைவரும் சமம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. நாம் இங்கு அண்ணன், தம்பிகளாக பழகி வருகிறோம். ஆனால் பா.ஜ., அரசு, மதத்தின் பெயரால் வெறியை துாண்டி மக்களை பிரிக்க நினைக்கிறது.அதை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார். சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை வழங்கியது தி.மு.க., ஆட்சி தான். ஹஜ் பயணம் மேற்கொள்ள செல்வோர் ஓய்வெடுக்க சென்னையில் மாளிகை கட்டி தரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது அரசியலுக்காக கிடையாது.இஸ்லாமியர்களாக இருந்தாலும், கிறிஸ்துவர்களாக இருந்தாலும் அனைவரையும் அரவணைத்து செல்லும் ஒரே இயக்கம் தி.மு.க., தான்' என்றார்.எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், சபா ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், காங்., மாநில துணைத் தலைவர் குலாம்மொய்தீன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் சித்திக்அலி, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், த.வா.க., மாவட்ட செயலாளர் குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M Ramachandran
மார் 16, 2025 20:17

ஆகையினால் தான் சிறு பான்மைய்ய தலைவருக்கு ஓர் தலைவர் நிக்க வைத்தே அவர்களின் பேச்சு இன்னொருவர் பிளாஸ்டிக் ஷேர் கொடுத்தார். ஏமாளி முஸ்லீம் மக்கள் ஸ்டாலின் அமைச்சரவையில் எத்தனை முஸ்லீம் அமைச்சர்கள் இருக்கிறார்கள்? காட்சியிலும் ஆட்சியிலும் அணைபவ மற்ற தன் மகனை தன மகன் என்று மன்னர் காலம் போல் பதவியில் அமர்ந்திருக்கிறார். வெளி வேக்ஷம் டிராமா போடுவதில் கில்லாடி.


raja
மார் 16, 2025 19:27

...கொடுக்கிறத குடிச்சி புட்டு எவ்வளவு எகத்தாளத்த பாரேன் இந்த திருட்டு திராவிடனுக்கு


xyzabc
மார் 16, 2025 12:48

ஓட்டுக்காக செய்யும் கேவலம். பொன்முடி மோசமானவர்


Sundaran
மார் 16, 2025 09:10

ஹிந்துக்களுக்கு சொரணை இல்லை .


தமிழன்
மார் 16, 2025 08:48

ஹஜ் பயணத்திற்காக சென்னையில் மாளிகை எதற்கு நேராக வீட்டிலிருந்து கிளம்பி வீட்டிலிருந்து கிளம்பி ஏர்போர்ட் சென்று மெக்கா மெதினாவுக்கு சென்று விட்டு வரலாமே அப்படித்தானே இவ்வளவு நாளாக நடந்து கொண்டிருக்கிறது இதற்கு தனியாக மக்கள் வரிப்பணத்தை வீணடித்து ஹஜ் இல்லம் என்று கட்டி அதில் திமுகவின் பெருமைகளை பேசி பின்னர் அவர்களை பயணத்திற்கு அனுப்புவதை விட இப்பொழுது உள்ள நடைமுறையே மேல்


புதிய வீடியோ