உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமி பலாத்கார வழக்கு வாலிபர் மீது குண்டாஸ்

சிறுமி பலாத்கார வழக்கு வாலிபர் மீது குண்டாஸ்

விழுப்புரம்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபர் குண்டாசில் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, அத்தியூர் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக்,35; செங்கல் சூளை தொழிலாளி. இவர், கடந்த ஆக., 28ம் தேதி, செங்கல் சூளையில் அவருடன் வேலை செய்த தொழிலாளி ஒருவரின், 10 வயது மகளை, வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்த புகாரின் பேரில், செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திக்கை கைது செய்து, விழுப்புரம் கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., சரவணன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, நேற்று போலீசார் கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !