உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச கண் சிகிச்சை முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

இலவச கண் சிகிச்சை முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

செஞ்சி: செஞ்சியில் நடந்த இலவச கண்சிகிச்சை முகாமை செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். செஞ்சி காந்தி பஜார் அரசு நடுநிலை பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பாரத் மித்ரன் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை, புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லுாரி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் முருகவேல் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். பாரத் மித்ரன் ஒருங்கிணைப்பாளர் ஜோலாதாஸ் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து முகாமில் கண்ணாடிக்கு பரிந்துறை செய்யப்படும் அனைவருக்கும் கண்ணாடியை தான் செலவில் வழங்குவதாக தெரிவித்தார்.டாக்டர்கள் ஷண்முகபிரியா, காவியா தலைமையிலான மருத்துவ குழுவினர் கண்பரிசோதனைகளை செய்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் கம்சலா மாரிமுத்து, பேரூராட்சி கவுன்சிலர் கார்த்திக், மணக்குள விநாயகர் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், பாரத் மித்ரன் நிர்வாகிகள் கமலா, சக்திவேல், அன்பு செழியன், ரமேஷ், ஞானமணி, முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 143 பேர் கண் பரிசோதனை செய்து கொண்டனர். 11 பேர் அறுவை சிகிச்சைக்கும், 79 பேர் கண்கண்ணாடிக்கும் பரிந்துரை செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை