கெடார் மருத்துவமனை கட்டட பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
விழுப்புரம் : கெடார் அரசு மருத்துவமனையில் பொது சுகாதார கட்டடம் கட்டுவதற்கான பணியை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.காணை அடுத்த கெடார் அரசு மருத்துவமனையில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வட்டார பொது சுகாதார கட்டடம் கட்டப்பட உள்ளது. கட்டட பணி துவக்க விழாவில், அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ராஜா, ஆர்.முருகன், முருகன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் வாசுகி முன்னிலை வகித்தனர்.பி.டி.ஓ., சிவநேசன், ஜூலியானா, ஒன்றிய துணை சேர்மன் வீரராகவன், அரசு வழக்கறிஞர் கோபு, ஒன்றிய நிர்வாகிகள் மதன், கருணாகரன், புனிதா அய்யனார், நாராயணசாமி, ஏழுமலை, ஊராட்சி தலைவர்கள் இந்திரா மணி, ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள் கருணாகரன், கண்ணகி உட்பட பலர் பங்கேற்றனர்.