மேலும் செய்திகள்
சத்துணவு உதவியாளர்களுக்கு பதவி உயர்வு பணி ஆணை
12-Mar-2025
செஞ்சி; செஞ்சியில் நடந்த திண்டிவனம் சிப்காட்டிற்கான ஆள்சேர்ப்பு முகாமை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.திண்டிவனம் சிப்காட்டில் இயங்கி வரும் காலணி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிய ஆள் சேர்ப்பிற்கான நேரடி வேலைவாய்ப்பு முகாம் செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. செஞ்சி சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஸ் டெவலப்பர்ஸ் நிறுவன துணை பொதுமேலாளர் முத்துவேல் வரவேற்றார்.மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து பேசினார். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உத்தரவை வழங்கினார். பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபாசங்கர், ஏ.பி.டி.ஓ., பழனி, செஸ் டெவலப்பர்ஸ் நிறுவன நிர்வாகிகள் கவுதமன், வெங்கட்ராமன், முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். ராபின்சன் நன்றி கூறினார்.
12-Mar-2025