உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மருத்துவமனையில் எம்.எல்.ஏ., ஆய்வு

மருத்துவமனையில் எம்.எல்.ஏ., ஆய்வு

விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவில் நோயாளிகள் காத்திருக்கும் கூடம் அமைக்கும் இடத்தை தேர்வு செய்தும், வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆலோசனையும் வழங்கினார். கல்லுாரி டீன் லுாசி நிர்மல் மெடோனா, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், ஏ.ஆர்.எம்.ஓ., வெங்கடேசன், தலைமை பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் ராஜவேல், உதவி பொறியாளர்கள் விஜயகுமார், வெற்றிவேல், திட்டக்குழு தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், முருகன், மாவட்ட தலைவர் பாபு ஜீவானந்தம், ஒருங்கிணைப்பாளர் சுந்தர் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை