திண்டிவனத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு
திண்டிவனம்: திண்டிவனத்தில் பாலம் மற்றும் கல்வெர்ட் அமைப்பதற்கான இடங்களை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். திண்டிவனம், கர்ணாவூர் பாட்டை இடுகாட்டிற்கு ஏரி வாய்க்காலை கடந்து சடலங்களை எடுத்து செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. இதேபோன்று, மரக்காணம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கர்ணாவூர் பாட்டை இடுகாடு பகுதியில் பாலம் அமைக்கவும், மரக்காணம் சாலையில் தேங்கும் மழைநீரை புறவழிச்சாலை வழியாக அகற்ற, கர்ணாவூர் பாட்டை பகுதியில் புதிய கல்வெர்ட் அமைக்க பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இந்த பகுதிகளில் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்து, கோப்புகள் தயார் செய்து அரசுக்கு அனுப்புமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். நகராட்சி கமிஷனர் பானுமதி, நகர மன்ற தலைவர் நிர்மலா, துணை தலைவர் ராஜலட்சுமி, கவுன்சிலர்கள் உமா சாய்செந்தில், பாபு, சீனிசின்னராஜ், ராம்குமார், தி.மு.க., நகர செயலாளர் கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.