உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வெள்ள நிவாரணம் எம்.எல்.ஏ., வழங்கல்

வெள்ள நிவாரணம் எம்.எல்.ஏ., வழங்கல்

செஞ்சி : செஞ்சி தொகுதியைச் சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு வெள்ள நிவாரண தொகையை எம்.எல்.ஏ., மஸ்தான் வழங்கினார்.செஞ்சி தொகுதிக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு வெள்ள நிவாரண தொகை 2000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது. தாசில்தார் ஏழுமலை தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சார் பதிவாளர் ஷர்மிளா வரவேற்றார்.நிகழ்ச்சியை மஸ்தான் எம்.எல்.ஏ., நிவாரண தொகை வழங்கி துவக்கி வைத்தர். பேரூராட்சி சேர்மன் ராஜலட்சுமி செயல்மணி, கூட்டுறவு சங்க செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் கவுன்சிலர்கள், வங்கி பணியாளர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை