உள்ளூர் செய்திகள்

 எம் .எல் .ஏ., ஆய்வு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். விக்கிரவாண்டி தொகுதி, மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னங்குப்பம், ஆசூர், கொட்டியாம்பூண்டி, உலகலாம் பூண்டி ஆகிய ஊராட்சிகளில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா பூத் வாரியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது, எஸ்.ஐ.ஆர்., படிவம் நிரப்புவது, அப்பகுதியில் உள்ள கட்சி பாக முகவர்கள், பூத் குழு உறுப்பினர்கள் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். மாவட்டச் சேர்மன் ஜெயச்சந்திரன், தொகுதி பார்வையாளர் ஜெயராஜ், ஒன்றிய செயலாளர் வேம்பிரவி, ஒன்றிய தலைவர் முரளி, மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் செல்வம், கிளை செயலாளர்கள் மோகன், சுதாகர், லட்சுமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை