உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மூத்த குடிமக்களுக்கு மொபைல் ஆப் ரெடி

மூத்த குடிமக்களுக்கு மொபைல் ஆப் ரெடி

விழுப்புரம் : மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;மூத்த குடிமக்கள் நலன் கருதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மூத்த குடிமக்களுக்கான சீனியர் சீட்டிசன் ஆப் என்கிற மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம்பெற்றுள்ளது. அருகில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய, மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றி விவரங்கள், மாற்று மருத்துவ மருத்துவமனை விவரங்கள் மற்றும் அவர்களின் குறைகளை தெரிவிக்க இந்த ஆப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த 'Senior citizen' என்ற மொபைல் ஆப் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை