மேலும் செய்திகள்
வேளாண் பணிகள் கலெக்டர் ஆய்வு
26-Jul-2025
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட சுகதார மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் கட்டடங்களின் தரம், உபகரணங்கள், தளவாட பொருட்கள், நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் அளவு குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம், கலெக்டர் கேட்டறிந்தார். பெண்களுக்கான குடும்ப நலத்துறை சார்ந்த விபரங்கள், தொழுநோய், காசநோய் தொடர்பாக நடத்திய கருத்தரங்கம், விழிப்புணர்வு ஏற்படுத்திய பணிகள் பற்றியும் கேட்டறியப்பட்டது. சுகாதாரம், குடும்ப நலத்துறை சார்பில் மேற்கொண்டு வரும் முக்கிய சுகாதார குறியீடுகள், திட்டங்கள் குறித்தும், தாய்மை இறப்பு விகிதம், குழந்தை பிறப்பு, இறப்பு விகிதம். கர்ப்பிணிகள் பதிவு, குறைமாத பிறப்பு எடை, ரத்தசோகை திருத்தம், பாலின விகிதம், இளம்வயது கர்ப்பம், மக்களைத் தேடி மருத்துவம், கிராம வறுமை வளர்ச்சி குழு உள்ளிட்ட சுகாதார குறியீடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இணை இயக்குநர் (சுகாதாரம்) ரமேஷ்பாபு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை முதல்வர் லுாசி நிர்மல் மெடெனோ, துணை இயக்குநர்கள் (குடும்ப நலம்) பத்மாவதி, சுதாகர் (காசநோய்) உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
26-Jul-2025