உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாதாள சாக்கடை பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

பாதாள சாக்கடை பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

விழுப்புரம் |: விழுப்புரத்தில், பாதாள சாக்கடை பள்ளம் தோண்டிய இடத்தில் தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் நகரில் இருந்து புதுச்சேரி, கடலுார், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலையாக கிழக்கு பாண்டி ரோடு உள்ளது. நகரின் கிழக்குப்புறத்தில் இருந்து விழுப்புரத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும், கிழக்கு பாண்டி ரோடு வழியாக வருகின்றன. இந்த வழியில் தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்களும் செல்கிறது. அதிகாலை முதல் இரவு வரையில், கிழக்கு பாண்டி ரோடு எப்பொழுதும் பிசியாக இருக்கும். இத்தகைய போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையில், ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனை சீரமைப்பதற்காக, இரு இடங்களிலும் தலா 100 மீட்டர் துாரத்திற்கு தார் சாலையை தோண்டி பணிகள் மேற்கொண்டனர். நகராட்சி நிர்வாகம் மூலம் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகள் சீர் செய்யப்பட்டன. பின்னர், பள்ளம் தோண்டிய இடத்தில், அவசர கதியில் மண் கொட்டி மூடினர்.சாலை பள்ளத்தை முறையாக மூடி தார் சாலை அமைக்காததால், மழை பெய்தபோது பள்ளத்தில் மண் உள்வாங்கியது. இதனால், பள்ளத்தில் கனரக வாகனங்கள் அடிக்கடி சிக்கிக் கொண்டன. பள்ளம் தோண்டிய பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.இப்பகுதியில், பள்ளம் தோண்டிய இடத்தில் மீண்டும் தார் சாலை அமைக்க கலெக்டர் தனி கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ