உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பச்சிளம் குழந்தைக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை முண்டியம்பாக்கம் அரசு டாக்டர்கள் சாதனை

 பச்சிளம் குழந்தைக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை முண்டியம்பாக்கம் அரசு டாக்டர்கள் சாதனை

விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பிறவியில் நுரையீரல் குறைபாடு உள்ள 45 நாள் பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ஏழுசெம்பொன் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் மனைவி அகிலா ,26; இவருக்கு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் முதல் பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அதில் ஒரு குழந்தைக்கு பிறவி நுரையீரல் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. குழந்தை பிறந்தது முதல் கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டார். இந்நிலையில் குழந்தை பிறந்து 45 நாட்கள் ஆகிய நிலையில் கடந்த 2ம் தேதி அன்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். மருத்துவக் கல்லுாரி டீன் லுாரி நிர்மல் மெடோனா ஆலோசனை பேரில் முதன்மை குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கற்பக விநாயகம் தலைமையில் ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், குழந்தை நல டாக்டர் திலகவதி, டாக்டர்கள் லட்சுமிபதி, பூரணி, மயக்கவியல் துறை டாக்டர்கள் லட்சுமி பிரகாஷ் மகேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கடந்த 12ம் தேதி அன்று குழந்தைக்கு, ஒபன் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்து பிறவி நுரையீரல் குறைபாட்டை சரி செய்தனர். மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் குழந்தை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தற்போது குழந்தை இயல்பாக மூச்சு விட முடிகிறது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 45 நாள் குழுந்தைக்கு சிக்கலான அறுவை சிகிச்சை இதுவே முதல் முறையாகும். முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினருக்கு டாக்டர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். குழந்தையின் தாய் அகிலா டாக்டர் குழுவினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ