மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் ஜூடோ போட்டியில் வெற்றி
30-Nov-2024
விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டம் பள்ளி மாணவர்கள், தங்கப் பதக்கம் வென்றனர்.விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில், பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர் தவமதியன், கராத்தே போட்டியில், மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார். இவர், தமிழக அணியின் சார்பில், டில்லியில் நடைபெற்ற தேசிய போட்டியில் பங்கேற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.இதே பள்ளியில் 7 வகுப்பு பயிலும் மாணவர் இனியன், மாவட்ட அளவிலான பட்டர் பிளை நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றார். மேலும், தேசிய நீச்சல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாவட்ட அளவில் தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியர் முருகன் பாராட்டு தெரிவித்தார். உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் ஆனந்த, ஓவிய ஆசிரியர் ராஜேஷ் கண்ணா, ஆய்வக உதவியாளர் உதயா மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
30-Nov-2024