மேலும் செய்திகள்
410 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
21-Nov-2024
பலகார கடைகளில் உணவு துறை ஆய்வு
29-Oct-2024
விழுப்புரம்: விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்ற கடைகளுக்கு நகராட்சியினர் 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.விழுப்புரம் நகரில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில், நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், எம்.ஜி.ரோடு, காமராஜர் வீதி, நேரு வீதி உள்ளிட்ட இடங்களில், நகராட்சி நகர் நல அலுவலர் ஸ்ரீபிரியா, துப்புரவு அலுவலர் ஆல்பர்ட், ஆய்வாளர் மதன்குமார் உள்ளிட்ட குழுவினர் கடைகளில் ஆய்வு செய்தினர்.தொடர்ந்து 65 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, 300 கிலோ அளவில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கப்புகள், பார்சல் பேப்பர்களை பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருந்த 20க்கும் மேற்பட்ட கடைகளுக்கு 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
21-Nov-2024
29-Oct-2024