மேலும் செய்திகள்
முத்துமாரியம்மன், காளியம்மன் தேர் திருவிழா
04-May-2025
வானுார்,: வி.பரங்கனி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.வானுார் அடுத்த வி.பரங்கனி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன், திரவுபதியம்மன் கோவிலில், தேர் திருவிழா கடந்த 22ம் தேதி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு தேர்திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 5 மணிக்கு மயானக்கொள்ளை விழாவும், இரவு அங்காள்ளம்மன் திருக்கல்யாணமும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
04-May-2025