உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அதிவேக 8 வழி சாலையாக மாற்ற நகாய் முடிவு

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அதிவேக 8 வழி சாலையாக மாற்ற நகாய் முடிவு

விக்கிரவாண்டி: சென்னை - திருச்சி இடையே போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், எட்டு வழி சாலையாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.நாட்டின் பொருளாதார முன்னேற்றம், சாலை வசதியை அடிப்படையாக கொண்டே அமைகிறது. சாலை வசதி முறையாக இருந்தால், தொழில் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகள் பெருகி, நாடு முன்னேற்றம் அடையும்.இதனை அடிப்படையாக கொண்டே மத்திய அரசு, நாட்டின் பிரதான சாலைகளை விரிவாக்கம் செய்து வருகிறது. அதில், தமிழகத்தில் பிரதான சாலையாக உள்ள சென்னை- திருச்சி தற்போது நான்குவழிச் சாலையாக இருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கத்தினால், சாதாரண நாட்களிலேயே கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இச்சாலையில் வாகன நெரிசல், விபத்துகள், உயிரிழப்புகளை தவிர்க்கவும், பயண நேரத்தை குறைத்திடவும், நான்குவழி சாலையை 8 வழி அதிவிரைவு பசுமை சாலையாக (கிரீன் பீல்ட் எக்ஸ்பிரஸ் வே) மாற்ற, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (நகாய்) திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சென்னை-திருச்சி இடையேயான 310 கி.மீ., துார பயண நேரம் 6 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த 8 வழிச்சாலை, சென்னை தாம்பரம் அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் இருந்து துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கான பூர்வாங்க பணியாக, சாலை வளைவுகள், அதிக விபத்து ஏற்படும் பகுதிகள், கூடுதல் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்க நிலம் எடுப்பு போன்ற புள்ளி விபரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள சாலை விரிவாக்க பணிகள் முடிந்த பிறகு இத்திட்டத்தை துவங்க, விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து நகாய் அதிகாரிகள் அனுப்ப உள்ளனர்.ஏற்கனவே தமிழ்நாட்டில் சென்னை - சேலம் அத விரைவுச் சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாக இந்த அதிவிரைவு சாலை அமையும் என நகாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த 'கிரீன் பீல்ட் எக்ஸ்பிரஸ் வே' திட்டம் வரும் 2025ம் ஆண்டு மத்தியில் துவங்கலாம் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V GOPALAN
அக் 23, 2024 16:51

Though we are paying 6 toll ges from Chennai to trichy our buses are maintaining 30 km per hour speed only. No govt buses are taking bypass road. Even three hours journey compulsory 20 minutes halt in hotel. Some even TVS champ wallah is overtaking our buses. 8 hrs journey time from kilambakkam to trichy just 285 km. We talk a lot but nothing is happening. Vikravandi Kumbakonam 4 lane bypass almost 10 years over.Still not completed