உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நந்தன் கால்வாயை துார்வார துணை முதல்வரிடம் மனு

நந்தன் கால்வாயை துார்வார துணை முதல்வரிடம் மனு

விழுப்புரம் ; விழுப்புரத்தில் நந்தன் கால்வாயை ஆண்டுதோறும் விவசாயிகளே துார்வார அரசாணை வழங்க வேண்டும் என கோரி விவசாயிகள், துணை முதல்வரிடம் மனு அளித்தனர்.விழுப்புரத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி விட்டு, வெளியே வந்த துணை முதல்வர் உதயநிதியிடம் தமிழ் மாநில விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து நந்தன் கால்வாய் வருகிறது. ஆண்டுதோறும் இந்த கால்வாயை துார்வாரும் பணியை விவசாயிகளே செய்ய அரசு ஆணை வழங்க வேண்டும். பனமலை ஏரியில் அணைக்கட்டு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி