உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு

பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு

விழுப்புரம்: மயிலம் பொறியியல் கல்லுாரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை சார்பில் 'நிக்ஸ்காம் 2.0' தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கில், தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் சாராத போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.கல்விக்குழுமம் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். கல்விக்குழுமம் இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவர் கணேசன் வரவேற்றார். முதல்வர் ராஜப்பன் வாழ்த்திப் பேசினார்.கருத்தரங்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முன்னாள் விஞ்ஞானி இளங்கோவன், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும், எதிர்காலத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறையின் தேவைகள் பற்றி கூறினார்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பல்வேறு பொறியியல் கல்லுாரிகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை