உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நவமால்மருதுார் பள்ளி நுாற்றாண்டு விழா

நவமால்மருதுார் பள்ளி நுாற்றாண்டு விழா

கண்டமங்கலம்; நவமால்மருதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நுாற் றாண்டு விழா நடந்தது.ஊராட்சி தலைவர் ஜெயராணி தலைமை தாங்கினார். கண்டமங்கலம் வட்டார கல்வி அலுவலர் சேகர், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, ஒன்றிய கவுன்சிலர் கலைராஜன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி வரவேற்றார். கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.பள்ளி தலைமையாசிரியர்கள் வைத்தியநாதன், ரவிச்சந்திரன், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஊராட்சி தலைவர் ஜெயராணி மாரிமுத்து, துணைத் தலைவர் ரேகாகுமார், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சண்முகம், முத்தரசன், ராஜா, சீத்தாராமன், முரளி மற்றும் தன்னார்வலர்கள் பள்ளிக்கு பீரோக்கள், மின் விசிறி, புத்தகங்களை சீர்வரிசையாக வழங்கினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை