உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

திண்டிவனம் நகராட்சியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டம், கடந்த 2023ம் ஆண்டில் முடிக்க வேண்டும். ஆனால் குறித்த காலத்திற்குள் முடிக்காமல், நீண்டு கொண்டே செல்கிறது. திட்டம் முடிந்துள்ள பல இடங்களில் புதிய சாலைகள் போடப்படவில்லை. பல இடங்களில் பைப் லைன் புதைக்கப்படாமல் இருக்கின்றது. இதனால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பணிகள் முடிந்துள்ள இடங்களில் நகராட்சி சார்பில் செப்டிங் டேங்குடன் இணைப்பு கொடுக்கும் பணிகள் துவங்கவில்லை. 268 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயராஜ், விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை