மேலும் செய்திகள்
எல்.ஆர்.ஜி., கல்லுாரிக்கு முதல்வர் நியமனம்
03-May-2025
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், இன்று (4ம் தேதி) நடக்கும் நீட் தேர்வு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.தேசிய தேர்வு முகமை சார்பில், இன்று (4ம் தேதி), மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு நடக்கிறது. விழுப்புரத்தில், அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி, காகுப்பம் அரசு பொறியியல் கல்லுாரி, அண்ணா அரசு கலை கல்லுாரி, எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரி ஆகிய 4 மையங்களில் தேர்வு நடக்கிறது. 1,300 மாணவர்கள், 2,877 மாணவிகள் என 4,177 பேர் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வையொட்டி நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை நேற்று கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேர்வு மையங்களில் 246 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
03-May-2025