மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி ஆண்டு விழா
26-Mar-2025
விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் நியூ ஜான்டூயி மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ெஷர்லி, கல்வி அதிகாரி சுகன்யா ராபின் முன்னிலை வகித்தனர். நிர்வாக அதிகாரி எமர்சன் ராபின் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்கள் அரசு கல்லுாரி முதல்வர் சிவக்குமார், தனியார் வங்கி மேலாளர் வனிதா ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினர்.பள்ளி ஆண்டறிக்கை டிஜிட்டல் முறையில் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களை விளையாட்டில் மாநில அளவில் வெற்றி பெறச் செய்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், சாரணர் படை ஆசிரியர் மற்றும் டென்னிஸ் ஆசிரியர் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.விழாவில், சிலம்பம், நடனம், மல்லர் கம்பம், நாட்டிய நாடகம், ஆங்கில நாடகம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி முதல்வர் ஸ்டீபன் நன்றி கூறினார்.
26-Mar-2025