உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதுச்சேரி சாலையில் டிராபிக்கை சீரமைக்க புதிய சிக்னல் திறப்பு

புதுச்சேரி சாலையில் டிராபிக்கை சீரமைக்க புதிய சிக்னல் திறப்பு

விழுப்புரம்,; விழுப்புரம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் வகையில் புதிய சிக்னலை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் தினந்தோறும் வாகன போக்குவரத்து எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சாலையில் பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகள் அதிகமாக உள்ளதால், எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறி வந்தனர். இதையொட்டி, விழுப்புரம் -புதுச்சேரி நெடுஞ்சாலையில் பானாம்பட்டு பாதை, கிழக்கு பாண்டி சாலை, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், இணையும் சாலையில் புதிய சிக்னல் போக்குவரத்து போலீசார் சார்பில் ஏற்படுத்தப்பட்டது. இந்த புதிய சிக்னலை, மக்களின் பயன்பாட்டிற்கு ஏ.எஸ்.பி., ரவீந்திர குமார் குப்தா துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஆயுதப்படை டி.எஸ்.பி., ஞானவேல், டிராபிக் இன்ஸ்பெக்டர் வசந்த், சப்-இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, விஜயரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி