சத்தமாக பைக் ஓட்டியவர் கைது
விழுப்புரம் : சாணிமேடு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் வெங்கடேசன், 19; அவர், நேற்று முன்தினம் 'பைக்'கில் விழுப்புரத்தில் சுற்றி வந்தார். வ.உ.சி., தெருவில் 'பைக்' சைலன்சர் அதிக சத்தத்துடன், அதி வேகமாக, ஓட்டிச்சென்றதை பார்த்த விழுப்புரம் டவுன் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் .