உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம்

வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம்

திண்டிவனம்: திண்டிவனத்தில், வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி அறிமுக ஆலோசனை கூட்டம் நடந்தது. திண்டிவனம் ஆர்யாஸ் ஓட்டலில் நேற்று மாலை, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம் மற்றும் சமூக வலைதளப்பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மஸ்தான், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல்மாலிக், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட பொருளாளர் ரமணன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார்.நகர செயலாளர் கண்ணன், விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு, ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், ராஜாராம், பழனி, தயாளன், மணிமாறன், நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், வர்த்தகர் அணி பிரகாஷ், விளையாட்டு அணி சந்திரன், நகர துணை செயலாளர் கவுதமன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ