உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒண்ணுமே புரியலே... வாக்காளர் பட்டியல் பயிற்சி முகாம்: பா.ம.க., - தே.மு.தி.க., - த.வெ.க., அப்செட்

ஒண்ணுமே புரியலே... வாக்காளர் பட்டியல் பயிற்சி முகாம்: பா.ம.க., - தே.மு.தி.க., - த.வெ.க., அப்செட்

தே ர்தல் ஆணையத்தின் மூலம், கடந்த 4ம் தேதி முதல், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து, ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக கடந்த 4ம் தேதிக்கு முன், கலெக்டர், சப் கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமில், தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான பா.ஜ., - காங்., - தி.மு.க., - அ.தி.மு.க., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., - வி.சி., ஆம் ஆத்மி, பி.எஸ்.பி.,. உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், பூத் ஏஜன்ட்டுகளுக்கு மட்டும் அரசு சார்பில் அழைப்பு அனுப்பபட்டிருந்தது. இந்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயிற்சி முகாமில் பங்கேற்றனர். இதில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் இழந்த பா.ம.க., - தே.மு.தி.க., மற்றும் புதியதாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள த.வெ.க.. உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. தேர்தல் களத்தில் அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகள் இருந்து வரும் நிலையில், மக்களிடம் பிரசித்து பெற்ற பா.ம.க., - தே.மு.தி.க., மற்றும் புதியதாக வளர்ந்து வரும் த.வெ.க., நிர்வாகிகள் யாரும் பங்கு பெற முடியாததால், அந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அப்செட்டாகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ