உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா

ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா

மயிலம், : மயிலம் ஒன்றியத்தில் குழந்தைகளுக்கு 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்ட துவக்க விழா நடந்தது.மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமதாஸ் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மனோசித்ரா வரவேற்றார்.விழாவில் சேர்மன் பேசுகையில்,'மயிலம் ஒன்றியம் முழுதும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மயிலம் ஒன்றியத்தில் இரண்டாவது கட்டமாக 152 குழந்தைகளுக்கு அரசின் மூலம் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது' என்றார். நிகழ்ச்சியில் மயிலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மணிமாறன், மயிலம் வட்டார தலைமை மருத்துவர் தேன்மொழி, குழந்தை பாதுகாப்பு திட்ட மேற்பார்வையாளர் அன்பழகி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை