மேலும் செய்திகள்
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வினியோகம்
21-Nov-2024
விழுப்புரம்: காணை பி.டி.ஓ., அலுவலகத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் ராஜா, பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், சீனுவாசன், உதவி பொறியாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., 119 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசுகையில், 'தாய்மார்கள் அதிக கவனத்துடன் குழந்தைகளை பராமரிக்க வேண்டும். தொடக்கம் முதல் சத்தான உணவை வழங்க வேண்டும்.ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வலிமையான, வளமான தமிழகத்தை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.கவுன்சிலர்கள் சிவக்குமார், சரவணன் மற்றும் ஊராட்சி தலைவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
21-Nov-2024