உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒலக்கூர் வட்டார சிலம்பம் மாணவ - மாணவியர் உற்சாகம்

ஒலக்கூர் வட்டார சிலம்பம் மாணவ - மாணவியர் உற்சாகம்

திண்டிவனம்:ஒலக்கூர் வட்டார சிலம்பம் போட்டியில், பள்ளி மாணவ, மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர். திண்டிவனம், வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளியில், ஒலக்கூர் வட்டார அளவிலுள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் பங்கு பெறும் குறுவட்ட அளவிலான போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 280 மாணவ, மாணவிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில்,14 மற்றும் 17, 19 வயதிற்குட்ட பிரிவுகளில், போட்டிகள் நடந்தன. இதில் தொடுமுறை சிலம்ப போட்டி, உடல் எடை அடிப்படையில், 30 முதல் 40 கிலோ வரை பிரிக்கப்பட்டு தனித்தனியாக நடைபெற்றது. தலைமையாசிரியர் ஜெபா(பொறுப்பு), உதவி தலைமையாசிரியர்கள் மோகன், ஜோசப், உடற்கல்வி இயக்குநர் ஜான் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் சிலம்ப போட்டியில் பங்கு பெற தகுதி பெறுகின்றனர். இந்த போட்டிகளை விழுப்புரம் மாவட்ட சிலம்ப கழகத்தின் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை