வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நல்ல தொழில் இருக்கும் போலிருக்கே. ரெண்டு கோடி வேலைல ஒண்ணா எடுத்துக்கலாம்.
தைரியமாக இவரிடம் பணம் அளிக்கலாம். நல்லது நடக்கும்.
தான் யாசகம் எடுக்கும் தொகையை, பொதுநல நிதியாக வழங்கி வரும் முதியவர், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுக்கா ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன், 75; விவசாய தொழிலாளியான இவருக்கு மனைவியும், ஒரு மகள், இரண்டு மகன்களும் உள்ளனர். பிள்ளைகளுக்கு திருமணம் ஆன நிலையில், பாண்டியன் குடும்பத்தைப் பிரிந்து, துறவரம் மேற்கொண்டு யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார்.இந்நிலையில் தான் யாசகம் எடுக்கும் தொகையை சேமித்து வைத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவியும், பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று கலெக்டரை சந்தித்து, பொதுநல நிதியும் வழங்கி வருகிறார்.இந்த வகையில், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்த அவர், கலெக்டர் பழனியை சந்தித்து, தான் சேமித்து வைத்திருந்த ரூ.10,000 தொகையை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.இதுவரை ரூ.1.60 கோடி அளவில், இதுபோல் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று, நிவாரண நிதியாக வழங்கியுள்ளதாகவும், விழுப்புரம் மாவட்டத்திற்கு இதுவரை 4 முறை வந்து, தலா ரூ.10 ஆயிரம் வீதம், முதல்வரின் பொதுநல நிதிக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். முதியவர் ஒருவர், தொடர்ந்து யாசகம் எடுத்து, பொதுநல நிதிக்கு வழங்கி வரும் செயலை, அலுவலர்கள், பொது மக்கள் பாராட்டினர்.
நல்ல தொழில் இருக்கும் போலிருக்கே. ரெண்டு கோடி வேலைல ஒண்ணா எடுத்துக்கலாம்.
தைரியமாக இவரிடம் பணம் அளிக்கலாம். நல்லது நடக்கும்.