உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மூதாட்டி காதை அறுத்து கம்மல் திருட்டு

மூதாட்டி காதை அறுத்து கம்மல் திருட்டு

அவலுார்பேட்டை : வளத்தி அருகே வீட்டிலிருந்த மூதாட்டியின் காதை அறுத்து கம்மல், மாட்டல் திருடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வளத்தி அடுத்த கஞ்சமலைபுரவடை கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் மனைவி சாரதா, 80; இவர், தனது மகன் சேகர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் வெளியே சென்ற சேகர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சாரதாவின் காதை அறுத்து அவரது 10 கிராம் கம்மல், மாட்டலை மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில், வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை