உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொலை முயற்சி வழக்கு குண்டாசில் ஒருவர் கைது

கொலை முயற்சி வழக்கு குண்டாசில் ஒருவர் கைது

விழுப்புரம் : ஆரோவில் அருகே கொலை முயற்சி வழக்கு குற்றவாளியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அடுத்த நாவற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் ரகு (எ) மாரியப்பன், 36; புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கடந்த பிப்ரவரி 14ம் தேதி வசந்தபுரம் ஓடையருகே தனது நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ரகு (எ) மாரியப்பன் காரில் மோதுவது போல வந்து நிறுத்தியுள்ளார்.இதை விஜயகுமார் தட்டிக்கேட்ட போது, ரகு (எ) மாரியப்பன் காரில் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தி மற்றும் இரும்பு ராடு மூலம் விஜயகுமாரை தாக்கினார்.ஆரோவில் போலீசார், கொலை முயற்சி வழக்குப் பதிந்து ரகு (எ) மாரியப்பனை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.இவர் மீது ஆரோவில் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், கொலை முயற்சி வழக்குகள் இருப்பதால், இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், நேற்று ஆரோவில் போலீசார் ரகு (எ) மாரியப்பனை குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்ததற்கான உத்தரவை, கடலுார் மத்திய சிறை அதிகாரியிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !