மேலும் செய்திகள்
கூலி தொழிலாளி தற்கொலை
25-May-2025
விழுப்புரம்: மயிலம் அருகே உள்ள தழுதாளி கிராமத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.மயிலம் அருகே உள்ள கீழ்எடையாளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பிச்சாண்டி மகன் பிரகாஷ், 33; தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் 48; இருவரும் நேற்று மதியம் புதுச்சேரியில் இருந்து பைக்கில் கீழ் எடையாளம் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.மதியம் 3:30 மணிக்கு, தழுதாளி கிராமம் அருகே வரும்பொழுது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்புக் கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் பைக் ஓட்டி வந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் பின்னால் அமர்ந்திருந்த முருகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. முருகனை முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.உயிரிழந்த பிரகாஷிற்கு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்தது குறிப்பிடதக்கது. இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
25-May-2025